×

ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சு; மகாபாரத காலத்தில் முதல் லோக் அதாலத்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமாக தீர்ப்பதற்காக சிறப்பு லோக் அதாலத் வாரம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘திருமண தகராறுகளை தீர்த்து வைப்பதில் லோக் அதாலத் பங்கு பாராட்டுக்குரியது. முன்பு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் செய்து வந்தனர். இப்போது தகராறுகளை தீர்த்து வைக்கும் மாற்று வழிமுறைகளால் கையாளப்படுகின்றது. கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையேயான பிரச்னையை தீர்ப்பதற்காக கிருஷ்ணர் முயன்றபோது முதல் லோக் அதாலத் நடத்தப்பட்டது. லோக் அதாலத் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சு; மகாபாரத காலத்தில் முதல் லோக் அதாலத் appeared first on Dinakaran.

Tags : Union ,Mahabharata ,NEW DELHI ,Lok Adalat ,Supreme Court ,Union Law Minister ,Arjun Ram ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...