×

ஒன்றிய அரசு 15% இடத்துக்கு கலந்தாய்வு அறிவித்ததும் தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஒன்றிய அரசு 15% இடத்துக்கு கலந்தாய்வு அறிவித்த அடுத்த நாளே தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி 169வது வார்டில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா சாலை பூங்கா பணிக்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் எல்.டி.ஜி. சாலையிலும், ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் வேளச்சேரி சாலையில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் நியாய விலை கடைகளை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் ஒரே கடையில் நீண்ட நேரம் காத்திருந்து உணவுப் பொருள் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மகேஷ் குமார் பரிந்துரையின் அடிப்படையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நியாய விலை கடை அமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் குழந்தை திருமண விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியாகி உள்ளது. இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம். தொடர்ந்து அது குறித்து பேசினால் நன்றாக இருக்காது. ஆளுநரும் தெரியாமல் பேசி வருகிறார். தொடர்ந்து இதனை விமர்சனம் செய்ய வேண்டாம்.

ஒன்றிய அரசு 15 சதவீதம் இடங்களுக்கு கலந்தாய்வு அறிவித்த அடுத்த நாளே தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எவ்வித பிரச்னையும் இருக்காது, விரைவில் ஒன்றிய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளோம். மேலும் தர்மபுரி, திருச்சி, ஸ்டான்லி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் நல்ல முடிவு வரும். இதனால் மருத்துவ சேர்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கைகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்களே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கின்றனர். இதுவே ஆளுநருக்கு பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசு 15% இடத்துக்கு கலந்தாய்வு அறிவித்ததும் தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : government ,Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...