×

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 29 துணை மேலாளர்

ஒடிசா, புவனேஸ்வரில் உள்ள தேசிய அலுமினியம் கார்ப்பரேஷனில் (நால்கோ) காலியாக உள்ள 29 துணை மேலாளர் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
1  Deputy Manager (Civil): 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1) தகுதி: சிவில்/ஆர்க்கிடெக்சர்/ செராமிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
2  Deputy Manager : ( Horticulture): 2 இடங்கள் (பொது). தகுதி: வேளாண்மை/வனவியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
3  Deputy Manager: (PR &CC): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் இதழியல் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4 Deputy Manager: (Law): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: Law சட்டப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
5 Deputy Manager (Mining): 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1). தகுதி: மைனிங் இன்ஜினியரிங்கில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Metalliferous Mine Manager‘s சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
6 Deputy Manager (Coal): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). தகுதி: மைனிங் இன்ஜினியரிங்கில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கோல் மைன்ஸ் ரெகுலேஷனில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
7 Deputy Manager: (Survey): 1 இடம் (ெபாது). தகுதி: மைனிங் இன்ஜினியரிங்கில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பிரிவுகளில் 5 ஆண்டுகள் முன்அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது. வயது: 27.09.2023 தேதியின் படி 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ₹70,000- 2,00,000. நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.nalcoindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (27.09.2023.)

The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 29 துணை மேலாளர் appeared first on Dinakaran.

Tags : Public Sector Agency ,State of the Union ,National Aluminium Corporation ,NALCO ,Bhubaneshwara, Odisha ,Manager ,Union ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யுமாறு திமுக எம்.பி. வில்சன் ஒன்றிய அரசுக்கு கடிதம்!