×

முதல்வர் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக இன்று பதவி ஏற்பு

சென்னை: மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, இன்று காலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி ஏற்கிறார். மன்னார்குடி தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருப்பவர் டி.ஆர்.பி.ராஜா. முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் அடிப்படையில் இவரை அமைச்சராக நியமிப்பதாக ஆளுநர் மாளிகை நேற்று முன்தினம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா, இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சராக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்கிறார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவைத் தொடர்ந்து, டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

The post முதல்வர் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக இன்று பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : D.R.P.Raja ,CHENNAI ,Mannargudi ,MLA ,DRP ,Raja ,Governor ,House ,Constituency ,Chief Minister ,Dinakaran ,
× RELATED ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’...