×

திரிணாமூல் காங்கிரஸ் எம்பி பதவி விலகல்

புதுடெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லூயிசின்ஹோ பலேரோ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். லூயிசின்ஹோ பலேரோ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2021ம் ஆண்டு திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார். கோவாவில் 2022ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு பலேரோவை மாநிலங்களவை எம்பியாக திரிணாமூல் காங்கிரஸ் நியமித்தது. ஆனால், கோவா சட்டப்பேரவை தேர்தலில் கோவா பர்வேர்ட் கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய்க்கு எதிராக போட்டியிட பலேரோ மறுத்து விட்டார். இதனால் கடசி மேலிடம் அவர் மீது அதிருப்தியில் இருந்த நிலையில், நேற்று பலரோ பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகுவதாகவும், ஆனால் தற்போது வேறெந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் லூயிசின்ஹோ பலேரோ தெரிவித்துள்ளார்.

The post திரிணாமூல் காங்கிரஸ் எம்பி பதவி விலகல் appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,New Delhi ,Luisinho Balero ,Parliament ,Luisinho… ,Dinakaran ,
× RELATED பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது...