×

திருச்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை

திருச்சி: சென்னையிலிருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி வந்த மங்களூர் விரைவு ரயிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் கொண்டு வரப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். சென்னையில் இருந்து மங்களூரு சென்ற ரயிலில் கீழக்கரையைச் சேர்ந்த லட்சுமணன் பயணித்தார்.

லட்சுமணன் என்பவரை பிடித்து, ரயில்வே போலீசார், வணிக வரித்துறையினர் விசாரணை நடத்தினர். உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.2 கோடி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வணிக வரித்துறையினர் மூலம் பணம் மற்றும் தங்கத்தை கணக்கிடும் பணி நடந்தது. ரூ.15.5 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த லட்சுமணனை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து லட்சுமணனை கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், ரொக்கப் பணம், ஹவாலா பணமா என ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Trishi ,Trichy ,Chennai ,MANGALORE ,TRICHI ,
× RELATED திருச்சி NIT விவகாரம் : மாணவிகளிடம்...