×

போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு வரையறுக்கப்பட்டது மற்றும் தென் மண்டல தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் இணைந்து மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவுகளில் பட்டய, பட்டம் பயின்ற மாணவர்கள் 1973 தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கி வருகிறது. நடப்பாண்டில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். www.boat-srp.com என்ற இணையதளத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு அக.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

The post போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Chennai ,Government Rapid Transport Corporation ,Managing Director ,Government Rapid Transport Corporation Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல்...