×

போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு..!!

மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வருகிற 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், வேலை நிறுத்தம் செய்வது பொங்கல் பண்டிகை வரும் நிலையில் வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். இந்த வழக்கை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பது சட்டவிரோதம் என்று வழக்கறிஞர் ஆதித்தன் வாதத்தை முன்வைத்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 

 

The post போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Transport Corporation ,Tamil Nadu Government Transport Corporation ,Dinakaran ,
× RELATED மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக...