×

ரயில் தண்டவாளத்தில் விழுந்த பாறை கற்கள்: பயங்கர விபத்து தவிர்ப்பு

கலபுர்கி: ரயில் தண்டவாளத்தில் விழுந்த பாறை கற்களை, டிரைவர் உரிய நேரத்தில் பார்த்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம், கலபுர்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகா மாநிலம் பீதரில் இருந்து நேற்று முன்தினம் இரவு கலபுர்கிக்கு டெமு பாசஞ்சர் ரயில் எண்.07746 சென்றது. பின்னர் மீண்டும் காலை 7.30 மணியளவில் பீதர் ரயில் நிலையத்தில் இருந்து கலபுர்கிக்கு புறப்பட்டது. கமலாபுரா தாலுகாவில் உள்ள மரகுட்டி அருகே காலை 9 மணியளவில் சுரங்கப்பாதையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, ​​மலைப்பாதையில் இருந்து பெரிய பாறாங்கல் உருண்டு வந்து தண்டவாளத்தின் ஓரத்தில் விழுந்து கிடந்தது. இதை பார்த்த டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பாறாங்கற்களை அப்புறப்படுத்திய பின்னர், ரயில் புறப்பட்டு சென்றது.

The post ரயில் தண்டவாளத்தில் விழுந்த பாறை கற்கள்: பயங்கர விபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kalaburki ,
× RELATED பெங்களூருவை தொடர்ந்து கலபுர்கி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்