×

ரயில் பெட்டியில் சிலிண்டர், விறகு, அடுப்பு கொண்டுவரப்பட்டது எப்படி?: லக்னோவில் இருந்து மதுரை வரை 40க்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்..!!

மதுரை: மதுரையில் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து 40க்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த 26ம் தேதி ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்ட ரயிலில் சிலிண்டர் வெடித்து 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீ விபத்து நடந்த ரயில் பெட்டியில் சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் பயணம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தப்பியோடி தலைமறைவாக இருந்த 5 பேரை கைது செய்த போலீசார், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் செப்டம்பர் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, உ.பி.யைச் சேர்ந்த தீபக், பிரகாஷ் ரஷ்தோகி, சுபம் காஷ்யப், நரேந்திரகுமார், ஹர்திக் சஹானே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். லக்னோவில் இருந்து சுற்றுலாவுக்கு வரும் போதே 2 சிலிண்டர்கள், 15 அடுப்புகள் கொண்டுவந்துள்ளனர். மேலும் கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக 3வதாக சிலிண்டர் ஒன்றினை வாங்கியுள்ளனர்.

சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தான் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையில் 2 நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரயில்வேத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், லக்னோவில் இருந்து மதுரை வரையிலான ரயில் நிலைய ஊழியர்கள் 40க்கும் அதிகமானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ரயில் பெட்டியில் எரிவாயு சிலிண்டர், விறகு, அடுப்பு எப்படி கொண்டு வரப்பட்டது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் பெட்டியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது. கண்காணிப்பு, பாதுகாப்பு குறைபாடு குறித்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

The post ரயில் பெட்டியில் சிலிண்டர், விறகு, அடுப்பு கொண்டுவரப்பட்டது எப்படி?: லக்னோவில் இருந்து மதுரை வரை 40க்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்..!! appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Madurai ,Dinakaran ,
× RELATED ரேபரேலி தொகுதி மக்களின் இதயங்களிலும்...