×

தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் உள்ளன: சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: குடியரசுத் தலைவர் வருகை சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது; பள்ளிக்கல்வியை காமராஜர் வளர்த்தார், கல்லூரிக் கல்வியை கலைஞர் விரிவு செய்தார் தற்போது திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம். கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது”. நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு சென்னை பல்கலை. தனது பங்களிப்பை ஆற்றி வருகிறது .

பேரறிஞர் அண்ணா சென்னை பல்கலைக் கழகத்தில்தான் படித்தார்; நானும் இங்குதான் படித்தேன். மாணவர்களை படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்காக நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து மாணவர்களையும் தனித் திறமையாளர்களாக வளர்த்து வருகிறோம். ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தனித்துவமான மாநில கல்விக்கொள்கை வடிவமைப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக உயர்கல்வி செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அளித்து வருகிறோம்.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. சேப்பாக்கத்தில் மாணவர்களுக்கான புதிய விடுதிகள் கட்டப்பட உள்ளன . பேராசிரியர்கள், மாணவர்களின் புதிய ஆராய்ச்சி சிந்தனைக்கு புத்துயிர் வழங்கும் விதமாக ‘முதலமைச்சரின் ஆராய்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். முதலமைச்சரின் ஆராய்ச்சி திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலை. வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு என்றென்றும் துணை நிற்கும். இளைஞர்களுக்கு தொழில்முறை, கல்வி அடிப்படையில் 2 ஆண்டுகாலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்தியாவில் தலை சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 18 நிறுவனங்கள் உள்ளன. தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் உள்ளன; சிறந்த 100 கல்லூரிகளில் 32 தமிழ்நாட்டில் உள்ளன. சிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளன; சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளில் 8 தமிழ்நாட்டில் உள்ளன. 40 மருத்துவ கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளன; சிறந்த 30 சட்ட கல்லூரிகளில் 8 தமிழ்நாட்டில் உள்ளன. சிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 தமிழ்நாட்டில் உள்ளன; சிறந்த மேலாண்மை கல்லூரிகளில் 11 தமிழ்நாட்டில் உள்ளன என்று சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

The post தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் உள்ளன: சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Mukhikar ,Chennai University ,G.K. Stalin ,Chennai ,President of the ,Kamarajar ,B.C. ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...