×

தக்காளி விலையை குறைக்க எடுத்த நடவடிக்கை என்ன ? ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி கேள்வி

புதுடெல்லி: நாடு முழுவதும் தக்காளி விலையை குறைக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி கேள்வி எழுப்பினார். மாநிலங்களவையில் தக்காளி விலை ஏற்றம் குறித்து திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதிலில், ‘‘நாடு முழுவதும் உள்ள 536 மையங்கள் மூலம் தக்காளி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை நுகர்வோர் விவகாரத் துறை கண்காணிக்கிறது. தக்காளியின் தற்போதைய விலை உயர்வை கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும் வகையில், விலை நிலைப்படுத்துதல் நிதியத்தின் கீழ் தக்காளி கொள்முதலை அரசு தொடங்கியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் அதிக மழை போன்ற வானிலை காரணிகளே தற்போதைய விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

மாநிலங்களவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஒன்றிய அரசுக்கு எழுப்பிய கேள்வியில்,‘‘நாட்டிலுள்ள பல்வேறு விளையாட்டு அதிகாரிகள், கூட்டமைப்புகள் பெற்றிருப்பது உண்மையா. மேலும் உள்நாட்டு நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச விளையாட்டு அதிகாரிகளின் எச்சரிக்கை உள்ளதா. எதிர்காலத்தில் போட்டிகளை தடை செய்யப்படாமல் இருப்பதற்கும், விளையாட்டுத்துறையின் உள் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்டிருந்தார்.

இதையடுத்து அதற்கு பதிலளித்த ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ‘‘தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் சம்பந்தப்பட்ட சர்வதேச கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட அந்தந்த விளையாட்டுகளின் நிர்வாகத்திற்கான பொறுப்பாகும். தங்கள் அங்கீகாரத்தையும் இணைப்பையும் தக்கவைக்க சம்பந்தப்பட்ட சர்வதேச கூட்டமைப்பின் விதிகளுக்கு இணங்க வேண்டும். அப்படி இல்லையெனில் ஆபத்தாகும். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மூலம் வீரர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குள் அவர்களின் பயிற்சி மற்றும் போட்டி வெளிப்பாடுகளுக்கு தொடர்ந்து உதவி வழங்கப்படுகிறது. இதில் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் நிர்வாகம் தொடர்பான சிக்கல்கள் ஆராயப்பட்டு, எதிரானவைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post தக்காளி விலையை குறைக்க எடுத்த நடவடிக்கை என்ன ? ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : DMK ,Union Govt. New ,Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED நீட்தேர்வு மோசடி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்