×

கோயம்பேட்டில் தக்காளி விலை சரிவு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.100 வரை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் அனைத்து காய்கறிகளும் வருகின்றன.இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால், ஒரு கிலோ தக்காளி ரூ.200, ரூ.180 ரூ.150, ரூ.120 என விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் இல்லத்தரசிகள் கடும் வேதனை அடைந்தனர். இதனை தொடர்ந்து தக்காளியின் வரத்து அதிகரிப்பால், நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 34 வாகனங்களில் 600 டன் காய்கறிகள் வந்தன. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கோயம்பேட்டில் தக்காளி விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,CHENNAI ,Koyambedu ,Koyambedu Market… ,Dinakaran ,
× RELATED கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல்...