×

தக்காளி விலை உயர்வு: ஓசூர் சுற்றுவட்டாரத்தில் தக்காளி திருட்டை தடுக்க வேலியமைத்து விவசாயிகள் இரவு, பகலாக காவல்

கிருஷ்ணகிரி: தக்காளியில் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் தோட்டங்களில் தக்காளி திருட்டை தடுக்க வேலியமைத்து விவசாயிகள் இரவு, பகலாக காவல் காத்து வருகின்றனர். ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். நடப்பாண்டில் நோய் தாக்கம் காரணமாக பெரும்பாலும் தக்காளி தோட்டங்கள் அழிந்து விட்டன.

மீதமுள்ள தோட்டங்களில் தக்காளி அறுவடைக்கு செய்யப்பட்டு ஓசூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தக்காளியை திருடி செல்கின்றனர். இதனால் தோட்டங்களில் தக்காளி திருட்டை தடுக்க முள்வேலி அமைத்தும், தோட்டத்தை சுற்றி கிரீன் மெஷ் கட்டி இரவு, பகலாக விவசாயிகள் கண் விழித்து காவல் காத்து வருகின்றனர்.

The post தக்காளி விலை உயர்வு: ஓசூர் சுற்றுவட்டாரத்தில் தக்காளி திருட்டை தடுக்க வேலியமைத்து விவசாயிகள் இரவு, பகலாக காவல் appeared first on Dinakaran.

Tags : Osur ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...