×
Saravana Stores

டிஎன்பிஎஸ்சி தேர்வாணயத்தின் மூலம் பல்வேறு பணியிடத்திற்கு 213 நபர்கள் இதுவரை தேர்வு: அமைச்சர் அன்பரசன் தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வாணயத்தின் மூலம் பல்வேறு பணியிடத்திற்கு 213 நபர்கள் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் வாயிலாக தேர்தெடுக்கப்பட்ட 63 உதவி பொறியாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 3 பணவசூலாளர்களுக்கு பணியிட ஆணைகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்கள்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து காலி அரசுப் பணியிடங்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் மூலமாக நிரப்பப்படும் என அறிவித்திருந்தார். பட்டப்படிப்பு படித்து பணிக்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 16.2.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1598 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து இன்றைய தினம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு முதன் முதலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 63 உதவி பொறியாளர்களுக்கு பணியிடத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஏழை எளிய மக்களுக்காக அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியினை எவ்வித தொய்வின்றி மேற்கொள்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்கள் தங்கள் கடமை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

நீங்கள் அனைவரும் வாரியத்திற்கு உறுதுணையாக இருந்து வாழ்வில் முன்னேற வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் வாரியத்திற்கு 64 இளநிலை உதவியாளர், 68 பணவசூலாளர்கள், 7சுருக்கெழுத்து தட்டச்சர், 11 சமுதாய அலுவலர் மற்றும் 63 உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் நிரப்பட்டது என அமைச்சர் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசுச் செயலாளர்.சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., வாரிய மேலாண்மை இயக்குநர்.சு.பிரபாகர் இ.ஆ.ப., வாரிய தலைமைப் பொறியாளர்கள், வே.சண்முகசுந்தரம் , அ. மைகேல் ஜார்ஜ் வாரிய செயலாளர், துர்காமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி தேர்வாணயத்தின் மூலம் பல்வேறு பணியிடத்திற்கு 213 நபர்கள் இதுவரை தேர்வு: அமைச்சர் அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : TNPSC Examination Board ,Minister ,Anbarasan ,Chennai ,Enterprises ,Department ,Tamil Nadu Urban Habitat Development Board ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவில் அமைச்சர்கள் ஆய்வு!!