×

திருவாரூர் மாவட்டத்தில் அரசு உத்தரவு படி 10 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் அரசின் உத்தரவுபடி நேற்று முதல் 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது முதல் கட்டமாக பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறான பகுதிகளில் இயங்கி வரும் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மாநிலம் முழுவதும் 500 கடைகளை நேற்று முதல் மூடுவதற்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் 138 கடைகளும், மதுரை மன்றத்தில் 125 கடைகளும், கோவை மண்டலத்தில் 78 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 100 கடைகளும், சேலம் மண்டலத்தில் 59 கடைகளும் என மொத்தம் 500 கடைகள் மூடப்படுகின்றன.

இதில் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் 110 கடைகள் இயங்கி வந்த நிலையில் அதில் 10 கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன.
இதில் திருவாரூர் விளமல் பகுதியில் இயங்கி வரும் 2 கடைகளில் ஒரு கடை, ஜூப்லி மார்க்கெட் கடை, வலங்கைமான் மாரியம்மன் கோயில் அருகே இயங்கி வந்த கடை, கூத்தாநல்லூர் காடுவெட்டி பகுதியில் ஒரு கடை மற்றும் மாப்பிள்ளை குப்பம், கொரடாச்சேரியில் தலா ஒரு கடை, மன்னார்குடியில் 4 கடை என மொத்தம் 10 கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன.

The post திருவாரூர் மாவட்டத்தில் அரசு உத்தரவு படி 10 டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : 10 ,Tasmac ,Tiruvarur district ,Tiruvarur ,10 Tasmac ,Tamil Nadu ,
× RELATED ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு