×

திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் தமிழ் வளர்ச்சிப் போட்டிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சகுந்தலாம்மாள் நினைவு 14ம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி நிறுவனத் தலைவர் எ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் தாளாளர் ப.விஷ்ணுச்சரண், முதன்மை செயல் அலுவலர் மோ.பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியை சுஜாதா ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் முதன்மைக் கல்வி அலுவலர் பெ.ரவிச்சந்திரன், நிலநிர்வாகத்துறை உதவி ஆணையர் வ.மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுகுத்துவிளக்கு ஏற்றி தமிழ் வளர்ச்சிப் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இந்த தமிழ் வளர்ச்சிப் போட்டிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து 70 பள்ளிகளை சேர்ந்த 3,100 மாணவர்களும், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 100க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், 100க்கும் மேற்பட்ட நடுவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 500 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் ஆகஸ்ட் 3ம் தேதி பரிசுகளை வழங்க உள்ளார்.

The post திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் தமிழ் வளர்ச்சிப் போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Tamil Development Competitions ,Thiruvallur Srinikethan School ,Thiruvallur ,14th annual ,Sakundalammal Memorial Tamil Development Competition ,Sri Niketan Matriculation Higher Secondary School ,president ,A. Panneerselvam ,P. Vishnucharan ,M. Paranidharan ,
× RELATED சாலையில் திரியும் கால்நடைகளால்...