×
Saravana Stores

திருப்பூரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.1127 கோடி மதிப்பில் 4 குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திருப்பூர்: திருப்பூரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.1127 கோடி மதிப்பில் 4 குடிநீர் திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்னும் சொல்லுக்கு அர்த்தமாகத் திகழும் திருப்பூரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக திருப்பூர் 4 குடிநீர் திட்டத்தை ரூ.1127 கோடி மதிப்பில் இன்று தொடங்கி வைத்தோம்.

திருப்பூர் மாநகராட்சியால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், பவானி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை அன்னூர் அருகே உள்ள அதிநவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பூருக்கு சுத்தமான குடிநீர் எடுத்து வரப்படுகிறது.

பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிதண்ணீர் என்ற நிலை மாற்றப்பட்டு இரண்டு லட்சம் இணைப்புகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்றும் 8,400 இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் இந்தத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 196 எம்.எல்.டி குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இன்றைய தேவையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் எதிர்கால நிலையையும் உணர்ந்து இந்த சிறப்புக்குரிய திட்டத்தை திருப்பூருக்கு தந்திருக்கிறது நம் திராவிட மாடல் அரசு. இதை பயன்படுத்தி சிறக்க திருப்பூர் மக்களுக்கு என் அன்பும் வாழ்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.

The post திருப்பூரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.1127 கோடி மதிப்பில் 4 குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayaniti Stalin ,Tiruppur ,Udayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!!