×

திருப்பதி மாவட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்ட பணிகளை கலெக்டர் கள ஆய்வு

*குறைகளை கேட்டறிந்தார்

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் நூறுநாள் வேலைத்திட்ட பணிகளை கலெக்டர் லட்சுமி ஷா கள ஆய்வு மேற்கொண்டார். திருப்பதி மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் சூரப்ப கசம் பகுதியில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் லட்சுமி ஷா ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் பேசியதாவது:

திருப்பதியில் மாவட்டத்தில் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ₹272 வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வாய்ப்பு உள்ள பகுதியில் பணி வசதி செய்து தர வேண்டும் என்றார். தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை அட்டை உள்ளதா, எத்தனை மணிக்கு வேலைக்கு வருகிறீர்கள், எத்தனை நாட்களில் சம்பளம் பெறுகிறீர்கள், சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்கிறதா, வேலை அட்டைகள் உள்ளதா, இல்லையா என தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து கலெக்டரிடம் பி.டி கூறுகையில், ‘விப்பமானுப்பட்டேடா ஊராட்சியை சேர்ந்த 34 கூலித்தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக ₹4.54 லட்சம் மதிப்பில் பனை குளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் வேலை உறுதியளித்த தொழிலாளர்களுடன் இணைந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டதால், தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பணி அடையாள பொறுப்பாளர் ஜெயந்தி, களம் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் கூலியாட்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி மாவட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்ட பணிகளை கலெக்டர் கள ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupati district ,Tirupati ,Collector ,Lakshmi Shah ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக...