×

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: தூத்துகுடியில் வரலாறு காணாத கனமழை, வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், அதன் பிறகு அவர்களுக்கு நிவாராண பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

இதனை எதிர்கொள்வதற்காக மக்களிக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து அங்கு தேவைப்பட கூடிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் அங்கு ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

மழை பாதிப்புகள் குறைந்த நிலையில், தென் மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்த நிலையில், கனமழையால் கடுமையாக பாதிக்கபட்ட பகுதிகளில் இருந்து மீட்கபட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளர். தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைகபட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.

The post தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tuticorin ,K. Stalin ,Tuthukudi ,Dinakaran ,
× RELATED ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி...