×

திருவில்லிபுத்தூர் உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை

*100 கிலோ ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்பட்டது. விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 100 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருவில்லிபுத்தூரில் தோட்டக்கலை துறை மூலம் உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை நேற்று துவங்கியது. முதற்கட்டமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 100 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.

இது குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர் கண்ணன் கூறும்போது, தமிழக அரசு உத்தரவுப்படி தோட்டக்கலைத் துறையில் உள்ள குழுக்கள் மூலம் தக்காளியை நேரடியாக வாங்கி உழவர் சந்தைக்கு கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்தோம். கடைகளில் கிலோ தக்காளி 100 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

தோட்டக்கலைத்துறை மூலம் பெரிய தக்காளி ரூ.70க்கும் சிறிய தக்காளி ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது. தினமும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.தோட்டக்கலைத் துறை மூலம் தக்காளி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை துறை அதிகாரி நடவு நடராஜன் மற்றும் திலகவதி, சித்திரைச் செல்வி தலைமையில் தோட்டக்கலை துறையினர் செய்திருந்தனர்.

The post திருவில்லிபுத்தூர் உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Tiruvilliputhur ,Market ,Farmers Market ,
× RELATED மரத்தில் கார் மோதி ராணுவ வீரர், நண்பர் பலி