×

கன்னியாகுமரி திட்டுவிளை பகுதியில் கடந்த 2022ல் 12 வயது சிறுவன் மரணமடைந்த வழக்கில் மற்றொரு சிறுவன் கைது..!!

 


கன்னியாகுமரி: கன்னியாகுமரி திட்டுவிளை பகுதியில் கடந்த 2022ல் 12 வயது சிறுவன் ஆதில் மரணமடைந்த வழக்கில் மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டார். கேரளா மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர் நிஜிபு. அவரது 12வயது மகன் ஆதில் முகமது அது பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த மே மாதம் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதை தொடர்ந்து அவர் மே மாதம் ஆறாம் தேதி மாயமாகி உள்ளார்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து எட்டாம் தேதி அவர் திட்டுவிளை அடுத்த மனத்திட்டை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பூதப்பணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையாக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில் ஆதில் முகமது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவனுடன் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

அந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆதில் முகமதை அழைத்துச் சென்ற மாணவனிடம் காவல்துறையினர் விசாரித்து பார்த்தனர். ஆனால் அந்த மாணவனிடம் இருந்து எந்த ஒரு தகவலையும் பெற முடியவில்லை. அதனை அடுத்து சிறுவன் ஆதில் முகமது மரணம் தொடர்பாக தென் மண்டல ஐஜி அஸ்ராகர்க் மேற்பார்வையில் மீண்டும் விசாரணை துவங்கியது. பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் ஆதில் முகமதை அழைத்துச் சென்ற சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த மாணவனை சம்பவம் நடந்த குளத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். காதில் முகமதை அழைத்துச் சென்ற சிறுவனும் மௌனமாக உள்ளதால் வழக்கு ஒரே இடத்தில் முன்னேற்றம் இல்லாமல் தேங்கி நின்றது. எனவே அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டது.வளர்ச்சி உண்மை தன்மையை கண்டறிய சிபிசிஐடி விசாரணையே உகந்ததாக இருக்கும் என அதில் கூறப்பட்டது. தற்போது அந்த வழக்கை பூதப்பாடி காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடிக்கு அவர் உத்தரவிட நிலையில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர் .

The post கன்னியாகுமரி திட்டுவிளை பகுதியில் கடந்த 2022ல் 12 வயது சிறுவன் மரணமடைந்த வழக்கில் மற்றொரு சிறுவன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kannyakumari Dituwile ,Kannyakumari ,Adil ,Kannyakumari Tatuvile ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் கைதி லாக் அப் மரணம்?...