×

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் சோதனை ஓட்டம் இன்று அமலுக்கு வந்தது

மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமானம் முனையம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி திறந்து வைத்தார். இந்த புதிய முனையம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத, மாசற்ற ஒரு நவீன முனையமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

பகல் 12.55 மணிக்கு வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வரும், யுஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கியது. இதில் இருந்து இறங்கிய பயணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த விமானம், பிற்பகல் 1.55 மணிக்கு, புதிய முனையத்திலிருந்து டாக்காவுக்கு புறப்பட்டு சென்றது.

The post சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் சோதனை ஓட்டம் இன்று அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Meenambakkam ,Meenambakkam, Chennai ,Chief Minister ,Dinakaran ,
× RELATED சென்னை விமானநிலையத்திற்கு 5வது...