×

முதலிரவுன்னா என்னன்னு தெரியுமா?.. மாணவியிடம் கேட்ட வாலிபர் கைது

சேலம்: சேலம் அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஆனந்த்(23). இவர், 8ம்வகுப்பு படித்துவரும் 13 வயதான சிறுமியிடம் செல்போன் எண்ணை கொடுத்து, தன்னிடம் பேசவேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி, தந்தையின் செல்போனில் இருந்து பேசியுள்ளார். அப்போது வாலிபர் ஆனந்த், முதலிரவுன்னா என்னன்னு தெரியுமா? என கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சிடைந்த அச்சிறுமி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வாலிபர் ஆனந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post முதலிரவுன்னா என்னன்னு தெரியுமா?.. மாணவியிடம் கேட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Thangavel ,Anand ,Salem Ayyandrumalikai Mariamman Temple ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!