×

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக முக்கிய தொழிற் சங்கங்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறது தமிழ்நாடு அரசு.!

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக முக்கிய தொழிற் சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்துகிறது. தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் ஆலோசிக்கின்றனர். தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 21 தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் அறிவித்துள்ளன.

அன்றைய தினம் பேருந்து மற்றும் ஆட்டோக்களை தொழிற்சங்கத்தினர் இயக்கமாட்டார்கள் என்று சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னையில் இன்று கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி இதற்கான வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கிறது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

The post 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக முக்கிய தொழிற் சங்கங்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறது தமிழ்நாடு அரசு.! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...