×

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  முதல்வர் வெளியிட்டுள்ள அறிகையில்; “தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் நேற்று (18-11-2024) மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது கணவரும் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தருமான ஆர். சேதுராமன் அவர்களுக்கும், மகன்கள் வைத்திய சுப்ரமணியம் (துணைவேந்தர்), சுவாமிநாதன் (புல முதன்மையர்), மகள் திருமதி. பிரியா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Tanjore Shastra University ,Chandra Sethuraman ,Chennai ,M. K. Stalin ,Chancellor ,Annar ,Tanjore Sastra University ,
× RELATED கேரளாவின் வரவேற்பு மிகுந்த...