×

தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு: மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.6.2025 அன்று தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மருந்துகளின் இருப்பு நிலை, வழங்கும் நடைமுறை, மற்றும் பொதுமக்கள் வருகை குறித்து பணியாளர்களிடம் நேரடியாக விவரங்களை கேட்டறிந்தார். மக்கள் நலன் கருதி குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகம் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவையின் தரம் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார். இத்திட்டம் பொதுமக்களிடையே நல்வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும். அதன் மூலம் மருத்துவச் செலவுகள் கணிசமாக குறைத்துவருவதாகவும், அந்த மருந்தகம் பணியாளர் முதல்வரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

The post தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு: மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister's ,Thanjavur ,Chief Minister ,M.K.Stalin ,Chief Minister's Dispensary ,Minister ,Dinakaran ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...