×

மணிப்பூரில் தொடரும் பதற்றம் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 45 பேர் காயம்

இம்பால்: வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மணிப்பூரின் பல மாவட்டங்களில் தொடர்ந்து ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த புதனன்று ஊரடங்கையும் மீறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் தெங்னோபால் மாவட்டத்தில் பல்லெல் பகுதியில் இரண்டு கும்பல் இடையே நேற்று மோதல் வெடித்தது. இதனையடுத்து இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் காயமடைந்தவர்கள் காக்சிங் ஜீவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர் இம்பால் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இம்பால் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் பரவிய நிலையில் தவுபால் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் பல்லெல் பகுதிக்கு விரைய முற்பட்டனர். ஆனால் அவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுத்து நிறுத்தினார்கள். இந்நிலையில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் 48வயது நபர் கொல்லப்பட்டார். 45 பெண்கள் காயமடைந்தனர். அசாம் ரைபிள் படையினர் கண்ணீர் புகை குண்டு வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மற்றொருபுறம் இம்பாலில் இருந்து பல்லேல் செல்ல முயன்ற ரைபிள் படை வீரர்கள் தவுபாலில் உள்ளுர்வாசிகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதனால், பதற்றம் அதிகரித்துள்ளது.

The post மணிப்பூரில் தொடரும் பதற்றம் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 45 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சண்டை