×

தொலைநோக்கி

டெக்னாலஜி

தொலைவில் இருக்கும் பொருட்களை தெளிவாகப் பார்க்க பயன்படும் கருவியை தமிழில் தொலைநோக்கி என்கிறோம். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் ஆராய்வதற்கு இது உதவுகிறது. 16ம் நூற்றாண்டிலேயே கண் கண்ணாடி செய்பவர்கள் லென்ஸ் என்னும் வில்லைகளை உருவாக்கிவிட்டனர். 1608ம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த கண்ணாடித் தயாரிப்பாளரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவர் குழி, குவி ஆடிகளைப் பயன்படுத்தி மூன்று மடங்கு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்கும்படியான தொலைநோக்கியை உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். அப்போது அதே நகரில் வசித்த ஜசாரியஸ் ஜான்சென் என்பவரும் தொலைநோக்கியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். ஹான்ஸ் லிப்பர்ஷேவுக்கு தொலைநோக்கிக்கான காப்புரிமையும் ஜான்செனுக்கு கூட்டு நுண்ணோக்கிக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டது.

1609ம் ஆண்டு கலிலியோ கலிலி டச்சு நாட்டு வில்லைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் ஒரு சில நாட்களில் சிறப்பான வில்லைகளை உருவாக்கிவிட்டார். இவரது தொலைநோக்கி 20 மடங்கு தூரத்தில் இருந்த பொருட்களையும் காட்டியது. அதுவரை உளவு பார்க்கும் கருவியாக இருந்த தொலைநோக்கியை கலிலியோ கலிலி வானியல் ஆய்வுக்கு பயன்படுத்தினார். கலிலியோ கலிலி தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை ஆராய்ந்து சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார். இப்போது தொலைநோக்கிகள் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல வடிவங்களிலும் பன்மடங்கு திறன் கொண்டவையாகவும் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

The post தொலைநோக்கி appeared first on Dinakaran.

Tags : Tamil ,
× RELATED மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில்...