×

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5,000 காவலர்களை கேட்டு தமிழ்நாடு அரசுக்கு தெலங்கானா தலைமை செயலாளர் கடிதம்!

சென்னை: தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5,000 காவலர்களை கேட்டு தமிழ்நாடு அரசுக்கு தெலங்கானா தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மிசோரம் மற்றும் சத்தீஷ்கரில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோல் சத்தீஷ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலங்கானாவில் நவம்பர் மாதம் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5,000 காவலர்களை கேட்டு தமிழ்நாடு அரசுக்கு தெலங்கானா தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஊர்க்காவல் படை டிஜிபி வன்னிய பெருமாள் அனைத்து மாநகர காவல்துறை ஆணையர், எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள காவலர்களை வரும் 27-ம் தேதி தெலங்கானா அனுப்புமாறும் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

The post தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5,000 காவலர்களை கேட்டு தமிழ்நாடு அரசுக்கு தெலங்கானா தலைமை செயலாளர் கடிதம்! appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Secretary ,Tamilnadu government ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...