×
Saravana Stores

அகவிலைப்படி உயர்வு: ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: எப்போதெல்லாம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுவது வழக்கம். மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற காலம் கொரோனா பேரிடர் நிதி நெருக்கடி மிகுதியான காலம். கடந்த ஆட்சியில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு போன்றவை முடக்கி வைக்கப் பட்டிருந்தது. முடக்கி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 11 சதவீதம் மட்டுமே உயர்த்துவார் என எதிர்ப்பார்த்து காத்திருந்த வேளையில் 14% ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாக உயர்த்தி வழங்கி அரசு ஊழியர், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களை இன்ப கடலில் ஆழ்த்தியுள்ளார்.

இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை உயர்த்தி அறிவிக்கிறதோ அப்போதே மாநில அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் என அறிவித்திருந்தார். தற்போது ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி அறிவித்துள்ளார். இதனால் 16 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குடும்பத்தினர் பயனடைந்துள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக முதலமைச்சர் இருப்பார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

The post அகவிலைப்படி உயர்வு: ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : Teacher's Progress Association ,Tamil Nadu ,Chief Minister ,CHENNAI ,State President ,Tamil Nadu Teachers' Progress Association ,K. Thiagarajan ,Dravida Munnetra Kazhagam ,Corona ,M.K.Stal ,Tamil ,Nadu ,Teacher's Progress Sangam ,
× RELATED முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வனின்...