×

ஆசிரியர் காலி பணியிடங்களில் மாவட்ட ஒதுக்கீடு வழங்க அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஆசிரியர் காலி பணியிடங்களில் 72 சதவீதம் வட மாவட்டங்களில் உள்ளதால் மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 72.32% பணியிடங்கள் வட மாவட்டங்களில் இருப்பதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

வட மாவட்டங்களில் பணியாற்றத் தயாராக இருக்கும் உள்ளூர் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சமூக அநீதி காரணமாக ஆசிரியர் பணி கிடைப்பதில்லை. இதற்கான ஒரே தீர்வு வட மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மண்டலமாக அறிவித்து, அந்த மண்டலத்திற்கான ஆசிரியர்கள் நியமனங்களில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்துவது தான். இந்த முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களே பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்று செல்ல மாட்டார்கள். சொந்த மாவட்டம் என்பதால் கூடுதல் அக்கறையுடன் பணி செய்வார்கள். எனவே, வட மாவட்ட ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.

The post ஆசிரியர் காலி பணியிடங்களில் மாவட்ட ஒதுக்கீடு வழங்க அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt ,Ramadoss ,CHENNAI ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு...