×

தேயிலை தோட்டத்தில் பட்டப்பகலில் புலி உலா தொழிலாளர்கள் அச்சம்

மூணாறு: மூணாறில் உள்ள தேயிலைத் ேதாட்டத்தில் பட்டப்பகலில் புலி சுற்றி வந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு, புலிகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையே மூணாறு அருகே உள்ள கடலாறு எஸ்டேட் தேயிலை தோட்டப்பகுதியில் நேற்று காலை 8 மணி அளவில் புலி ஒன்று சாலையை கடந்து செல்வதை தொழிலாளர்கள் பலரும் கண்டுள்ளனர்.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொழிலாளிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இந்த எஸ்டேட்டில், பத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை புலி அடித்துக்கொன்றுள்ள நிலையில், தற்ேபாது பட்டப்பகலில் அது எஸ்டேட் பகுதியில் சுற்றி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

The post தேயிலை தோட்டத்தில் பட்டப்பகலில் புலி உலா தொழிலாளர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Kerala ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு