×

தாம்பரத்தில் இன்று மற்றும் நாளை வரிவசூல் மையங்கள் அனைத்தும் செயல்படும்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை 30.04.2023க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, தங்களது சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகை பெற (29, 30ம்தேதி) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணிவரை செயல்படும்.

எனவே மைய அலுவலக கணிணி வரிவசூல் மையம், ஐந்து மண்டல அலுவலகங்கள், கம்பர் தெரு, கிழக்கு தாம்பரம், முடிச்சூர் சாலை, மேற்கு தாம்பரம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை, பல்லாவரம், ராதா நகர், நேரு நகர், கீழ்கட்டளை, கண்ணபிரான் கோயில் தெரு, செம்பாக்கம், சிட்லபாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், மாடம்பாக்கம் ஆகிய கணிணி வரிவசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ செலுத்தலாம்.

மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வழியாக எளிய முறையில் வரியினை செலுத்தலாம். எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தி மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு தங்களது பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாம்பரத்தில் இன்று மற்றும் நாளை வரிவசூல் மையங்கள் அனைத்தும் செயல்படும் appeared first on Dinakaran.

Tags : Dampar ,Thambaram Corporation ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...