×

500 டாஸ்மாக் கடைகளை மூட கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

சென்னை: 500 டாஸ்மாக் கடைகளை மூட கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் சிலரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்ற அறிவிப்பை மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மானியக்கோரிக்கையின் போது அறிவித்திருந்தார். இந்த அளவில் எந்தெந்த கடைகளை மூடலாம் என்பதற்கான பணிகள் துவங்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு மதுபான கடைகளை பொறுத்தவரை இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தொழில் முறை என்று குறிப்பாக 50 மீட்டற்குள்ளாக டாஸ்மாக் கடைகள் இருக்க கூடிய சூழ்நிலையில் அதற்கு அருகாமையில் 50 மீட்டர் குள்ளாக மற்றொரு கடை இருந்தால் அந்த கடையை மூடுவதற்கான கணக்கெடுக்கக்கூடிய நிலையும், அதே போன்று வருவாய் குறைவாக இருக்க கூடிய கடைகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தான் கணக்கெடுக்கும் பணி தொங்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் கடைகள் அடையாளம் காணப்பட்டதற்கு பின்பாக 500 கடைகளை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் வேயாகியுள்ளது. கடந்த மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு மானிய கோரிக்கையை பொறுத்தவரை 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் தகுதியான 50 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தக்கூடிய விதமாக தமிழ்நாட்டில் 500 கடைகள் எந்த அடிப்படையில் மூடலாம் என்பதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. குறைவாக விற்பனை இருக்கக்கூடிய கடைகள் இதற்கு முனபாகவே டாஸ்மாக் இருக்க கூடிய இடங்களிலே 50 மீட்டர் குள்ளாகவே மற்றொரு கடை இருந்தால் அந்த கடை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வின் அடிப்படையில் அடுத்தகட்டமாக 500 கடைகளை மூட திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 500 டாஸ்மாக் கடைகளை மூட கணக்கெடுக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…