×
Saravana Stores

தஞ்சையில் அமரன் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்: படத்தில் காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதா என கண்டனம்

தஞ்சாவூர்: கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமரன் திரைப்படத்தில் ஜம்மு – காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்கள் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆற்று பாலத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரது உருவப் பொம்மைகளை எரித்து எதிர்ப்பை பதிவு செய்த அவர்கள் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

The post தஞ்சையில் அமரன் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்: படத்தில் காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதா என கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Sivakarthikeyan ,Kamal Haasan ,Jammu ,Kashmir ,
× RELATED அமரன் படத்துக்காக மன ரீதியாக தயார் ஆனேன்: சிவகார்த்திகேயன்