×

தமிழக அரசின் தலைமை காஜி மறைவு: கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தலைமை காஜி சலாவுதீன் முகமது சாகிப் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.

பாமக செயல் தலைவர் அன்புமணி : சலாவுதீன் முகமது சாகிப், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியத் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். தமிழகத்திலுள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, கலாச்சாரம் குறித்து வழிகாட்டினார்.

தமாக தலைவர் ஜி.கே. வாசன்: இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்தவர். சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்களின் மறைவு அவரது குடும்பத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் பேரிழப்பாகும்.

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்: ஈடு இணையற்ற சேவை மனப்பான்மை கொண்ட சலாவுதீன் முகமது சாகிப்பை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த
இரங்கல்.

தவெக தலைவர் விஜய் : தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு பணியாற்றியவர். அரசு வழங்கிய கார், வீடு, தலைமை அலுவலகம் என தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர்.

 

The post தமிழக அரசின் தலைமை காஜி மறைவு: கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,qazi ,Chennai ,Salahuddin Mohammed ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,Salahuddin Mohammed Sahib ,Tamil Nadu… ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!