×

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் மே 27வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் மே 27வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் வெப்பநிலை குறைந்தபட்சம் 28-29 டிகிரி; அதிகபட்சம் 38-39டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். தமிழகத்தில் அதிகபட்சமாக சிற்றாறு-9, வால்பாறை-8, சிவலோகம், மேல்கூடலூரில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் மே 27வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Survey Centre ,Tamil Nadu ,Puducherry ,Chennai ,Tamil Nadu, ,Chennai Meteorological Research Centre ,
× RELATED தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி...