×

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு எடுத்துக் கொள்வதால் சித்தா பல்கலை. மசோதாவை ஏற்க முடியாது : ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!!

சென்னை : தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவில், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் துணை வேந்தர் நியமனங்களையும் தமிழக அரசே மேற்கொள்ளும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக மசோதா உள்ளதாக தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “2 முறையும் பல்கலை. வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என கூறப்பட்டுள்ளதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு எடுத்துக் கொள்வதால் மசோதாவை ஏற்க முடியாது. பல்கலைக்கழகங்களில் அரசியல் இருக்கக்கூடாது என்பதற்காகவே ஆளுநர்கள் மூலம் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.அண்ணா. பல்கலைக்கழகம் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்கள் சார்ந்த மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 48 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளேன்.3 சட்ட மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் பரிசீலனையில் உள்ளது. எந்த மசோதாவும் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இல்லை.”என்றார்.

The post துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு எடுத்துக் கொள்வதால் சித்தா பல்கலை. மசோதாவை ஏற்க முடியாது : ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Vice Chancellor ,Sitta University ,Governor ,R. N.N. Ravi ,Chennai ,Government of Tamil Nadu ,N.N. Ravi ,Government ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக...