×

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது… மே 29ம் தேதி வரை 25 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்!!

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது மே 29ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் வழக்கத்தைவிட வெயில் அதிகரித்து காணப்படும் வாய்ப்பு உள்ளது. முதல் 7 நாளில் வெப்பம் மெதுவாக அதிகரித்து 14 நாட்கள் வரை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும்.அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் கடைசி 7 நாளில் மெதுவாக குறைந்து இயல்பு நிலைக்கு வானிலை மாறும். பசிபிக் கடல் பகுதியில் நீடித்து வரும் எல்நினோ பரவல் காரணமாக இந்த கோடையில் வெயில் இயல்பைவிட கூடுதலாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதால், 113 டிகிரியை தாண்டியும் வெயில் கொளுத்தும் வாய்ப்புள்ளது.

அதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே வெப்பத்தை தணிக்க வருண பகவான் கருணையால் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் மே 8ம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அது வலுப்பெற்று வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது… மே 29ம் தேதி வரை 25 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்!! appeared first on Dinakaran.

Tags : Agni Star ,Tamil Nadu ,Chennai ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...