×
Saravana Stores

தமிழ்நாட்டில் பாஜவுக்கு இடமில்லை:துரை வைகோ பேட்டி

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மக்கள் நலத்திட்டங்கள் ஏழை, எளிய மக்களை சென்று அடைவதால் தமிழ்நாடு, புதுவை உள்பட 40 தொகுதிகளில் மக்கள் இமாலய வெற்றியை தந்துள்ளனர். திருச்சி தொகுதி மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்த எளியவன் பாடுபடுவான்.

எம்ஜிஆர் கண்ட ஒரு இயக்கம் அதிமுக. அந்தக் கட்சியும், திராவிட கட்சிதான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திராவிடக் கட்சிகள் இடையே மட்டுமே போட்டி. இங்கு பாஜவுக்கு வேலையே இல்லை. தமிழ்நாட்டில் பாஜவுக்கு இடமே இல்லை. இவ்வாறு துரை வைகோ கூறினார்.

The post தமிழ்நாட்டில் பாஜவுக்கு இடமில்லை:துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,Chennai ,MDMK ,General Secretary ,Chief Minister ,M.K.Stalin ,Puddu ,Tamil Nadu ,Trichy ,BJP ,Tamilnadu ,
× RELATED மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் மறைவுக்கு துரை வைகோ நேரில் ஆறுதல்