×
Saravana Stores

தமிழகத்தில் பாஜ கூட்டணி வலுவிழந்து கிடக்கிறது: கிருஷ்ணசாமி பேட்டி

கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி எண்ணிக்கையிலும், கொள்கை அடிப்படையிலும் ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு குறைந்தது 2 அல்லது 3 இடங்களை கேட்க விரும்புகிறோம். இருப்பினும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று சொல்வதற்கு இப்போது எதுவும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. இக்கூட்டணி வலுவிழந்து கிடக்கிறது. தமிழகத்தில், தற்போது புதிய அரசியல் சூழல் நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் பாஜ கூட்டணி வலுவிழந்து கிடக்கிறது: கிருஷ்ணசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Krishnasamy ,New Tamil Nadu Party ,President ,Dr. ,Kuniyamuthur, Coimbatore ,Tamil Nadu party ,
× RELATED தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த...