×

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 28ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Center ,Chennai ,Chennai Meteorological Department ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று...