×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24.07.2023 அன்று மாலை வடக்கு ஆந்திரா தெற்கு ஓரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது நேற்று(25.07.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.

மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு ஆகிய காரணங்களால் தமிழகத்திற்கு 31-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department ,CHENNAI ,Chennai Meteorological Center ,
× RELATED தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு