சென்னை: தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் மதுரையிலிருந்து கோவை கொண்டு செல்லப்பட்ட ரூ.15 லட்சம் பாதிப்புள்ள 13 கிலோ வெள்ளி பொருட்கள் தாரா புரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கபட்டிருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் விநியோகிப்பதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ வெளி பொருட்கள் மரிமுதல் செய்யப்பட்டது. மதுரையிலிருந்து கோவைக்கு கொண்டு செல்லப்பட்ட இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். ராஜபாளையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
வாகன தணிக்கையில் மினிலாரியில் சென்ற ஜோசப் ராஜா என்பவர் ஆவணங்கள் ஏதும் இன்றிபணத்தை வைத்திருந்தது தெரியவந்தது. சென்னை வண்ணாரப்பேட்டையிலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 200 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விராலிமலை தொகுதியில் உரிமம் பெற்ற 4 உள்பட 68 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்பு அந்த துப்பாக்கிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
ஈரோடு மாவட்டம் ரங்கம் பாளையத்தில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் மதுரையை சேர்ந்த புல்தீப்சிங் என்பவரிடமிருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மேட்டூர் தெலுங்கனூர் பகுதியை சேர்ந்த பிரகதீஸ்வரன் உரிய ஆவணங்கள் இன்றி காரை வாங்குவதற்காக பணம் கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை: உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற பணம் கட்டுகட்டாக சிக்கியது appeared first on Dinakaran.