×
Saravana Stores

தமிழ் வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

டெல்லி: தமிழ் வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மே 28, 2023 நினைவிருக்கிறதா? செங்கோலுடன் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்த நாள் – மோடி ஒரு பேரரசர் என்று நியாயப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தமிழ் வாக்காளர்களை ஈர்க்கவும், 15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வரலாறு திரிக்கப்பட்டது.

அந்த நாடகத்தின் முடிவு இப்போது எல்லோருக்கும் தெரியும். செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது, ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் திரு. மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ் வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : MODI ,CONGRESS ,GENERAL SECRETARY ,JAIRAM RAMESH ,Delhi ,Secretary General ,Narendra Modi ,Chengol ,
× RELATED ஒன்றிய அரசின் தவறான செயல்பாட்டால்...