×

தமிழக காவல் துறையின் மகளிர் பொன்விழா ஆண்டு பாய்மர படகு சாதனை பயணம்: 2ம் நாளாக எண்ணூரில் இருந்து புறப்பட்டது

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் சேர்க்கப்பட்ட மகளிர் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 1000 கி.மீ., சாதனை பாய்மர படகு பயணம் நடைபெற்று வருகிறது. பொன்விழா ஆண்டை முன்னிட்டு மகளிர் காவல்துறையினரை சிறப்பிக்கும் வகையில், சென்னையில் இருந்து பழவேற்காடு சென்று, அங்கிருந்து கோடியக்கரை சென்று, மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில் 1000கிமீ பாய்மர படகு பயணத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் உரிய பாதுகாப்புகளுடன் 30 பேர் கொண்ட மகளிர் காவல்துறையினர், 4 படகுகளில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி பழவேற்காடு வரை சென்று மீண்டும் திரும்பி எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு வந்தடைந்தனர். 2வது நாளான நேற்று இந்த சாதனை பாய்மர படகு பயணத்தினை கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி சுந்தரவடிவேல், பொன்னேரி சப்.கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து 4 படகுகளில் மகளிர் காவல்துறையினர் கோடியக்கரை நோக்கி தங்களது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

The post தமிழக காவல் துறையின் மகளிர் பொன்விழா ஆண்டு பாய்மர படகு சாதனை பயணம்: 2ம் நாளாக எண்ணூரில் இருந்து புறப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Police Department ,Golden Jubilee ,Ennore ,Chennai ,
× RELATED மதுராந்தகம் நகராட்சியின் 50ம் ஆண்டு பொன்விழா கூட்டம்