×

தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளது: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் நாட்டுக்கே வழிகாட்டும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை திட்டங்கள். ரூ.8,000 கோடியில் 20,000 கி.மீ. நீள கிராம சாலைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.7,000 கோடியில் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.1,182 கோடியில் 505 கி.மீ. நீளச் சாலைகள், 308 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.419.27 கோடியில் இலங்கைத் தமிழர்களுக்கு 7,429 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. திராவிட மாடல் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகார வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil ,Nadu ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!