×

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு, கேம்ப்ரோடு சந்திப்பில் உள்ள நடராஜன் சாலையை ஒட்டி கடைகள், குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக சாலை போடப்படவில்லை. இந்நிலையில் அங்கு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வைத்த தொடர் கோரிக்கையை அடுத்து ரூ.6 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.

ஆனால், அந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி நகர அமைப்பு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்து வந்தனர். இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Ward 45 ,Natarajan Road ,Camroad ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில்...