×

இன்று 2வது டி20 போட்டி: வெற்றியை தொடர இந்தியா முனைப்பு; பதிலடி கொடுக்குமா ஆஸி.?

திருவனந்தபுரம்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 போட்டி, திருவனந்தபுரத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது. இந்தியா வந்துள்ள மேத்யூ வேடு தலைமையிலான ஆஸி. அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. விசாப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆஸி. 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்து இமாலயஇலக்கை நிர்ணயித்தது. உலக கோப்பையில் சொதப்பிய சூரியகுமார், டி20 கேப்டனாக முதல் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அசத்தினார்.

இஷான், ரிங்கு சிங் ஆகியோரும் கை கொடுக்க இந்தியா 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 209ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸி. அணியில் ஜோஷ் இங்லிஸ் 110 ரன் விளாசியது வீணாகிப் போனது. இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, தொடரின் 2வது ஆட்டம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. முன்னிலையை அதிகரிக்க இந்தியாவும், முதல் வெற்றியைப் பெற ஆஸ்திரேலியாவும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இந்தியா: சூரியகுமார் (கேப்டன்), இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்கள்), ருதுராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல், முகேஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஆவேஷ் கான்.

* ஆஸ்திரேலியா: மேத்யூ வேடு (கேப்டன்), ஜோஷ் இங்லிஸ், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆரோன் ஹார்டி, ஷான் அபாட், தன்வீர் சங்கா, நாதன் எல்லீஸ், ஜேசன் பெஹரண்டார்ப், ஆடம் ஸம்பா.

The post இன்று 2வது டி20 போட்டி: வெற்றியை தொடர இந்தியா முனைப்பு; பதிலடி கொடுக்குமா ஆஸி.? appeared first on Dinakaran.

Tags : 2nd T20I ,India ,Aussies ,Thiruvananthapuram ,2nd T20 ,Australia ,2nd ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடுகளை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்